கனவல்ல நிஜம்

கடற்கரைக்கு அழைத்தவுடன் வந்துவிட்டாய் மறுப்பேதும் பேசாமல் என்னுடன் அலையை ரசித்தபடி நீ உன்னை ரசித்தபடி நான் சுகந்தமான உன்னை தரிசிக்க அலைகள் இரண்டு சண்டையிட்டு கரைக்கு விரைகின்றன நான் பேச எத்தனித்த வார்த்தைகளை நீ சேமிப்பதற்குள் கடற்கரை உப்பு காற்றில் அவை கரைந்து விடுகின்றன நீ வீட்டிற்க்கு போகலாம் என எழுந்து உன் மேல் மணல்துகள் களை துடைக்கையில் சொற்ப ஆயுளை கொண்ட அவைகள் ஒவ்வொன்றும் செத்து செத்து விழுகின்றன மீண்டும் மண்ணிலேயே நேற்றை போலவே வெறுமென கழிந்தது இன்றைய கனவு நாளை நிச்சயம் சொல்லிவிடுவேன் என் காதலை உன்னிடம் கனவில் அல்ல நிஜத்தில் ..