Posts

Showing posts from March 14, 2010

அழகை காண ..

Image
நிலவோ மறைய மறுக்கிறது , சூரியனோ உதிக்க அடம் பிடிக்கிறது , மேகக்கூட்டம் அனைத்தும் திரண்டு உன் வாசல் முன் நிற்கிறது பூக்கள் அனைத்தும் புதிதாய் பூக்கின்றன நீ கோலம் போடும்  அழகை காண ....

நினைவுகள்

Image
அந்த நினைவுகளை எப்படி மறப்பது அந்த நினைவுகளை கடற்கரை மணலில் என்கால்கள் புதைத்து நீ விளையாடிய பொழுதுகள், கொட்டும் மழையில் ஒற்றை குடையில் இருவரும் சேர்ந்து பள்ளி சென்றதை இடைவேளை மணிகள் நமக்காக ஒலிப்பதால் என்னவோ அதிகம் பழுதாகி இருக்கும் வாசலில் சாயம் மிட்டாய் விற்கும் ராமசாமி அண்ணன்கூட நினைவு வைத்து இருப்பார் கையில் எனக்கு கடிகாரமும் உனக்கு பாம்பு போல் உருவமும் செய்து கொசுறாக கொஞ்சம் கன்னத்திலும் பூசிவிட்ட சாய மிட்டாய் இன்னமும் இனிக்கிறது என் உள் நாக்கில் ,நீ ராட்டினம் சுற்றும் போது கூட உனக்கு தெரியாமல் அவரிடம் நான் தரும் அதிக காசுதான் உன்னை அதிக நேரம் சுழல செய்கிறது என்று அறியாமல் நீ சுற்றிய அந்த இடம் இன்னும் மாறாமல் என்னுள் சுற்றி கொண்டுதான் இருக்கிறது ராட்டினமாய் . எனக்கு நேரம் பார்க்க கற்று கொடுத்ததும் நீ தான் அதனாலோ என்னவோ ஒவ்வொரு முறையும் நேரம் பார்க்கும் போது நினைவுக்கு வருகிறது நம் பள்ளி மணியும் உன் முகமும் ............நினைவுகளோடு -சண்முகம் .

கடல் அலையும் ....

Image
  ஒவ்வொரு முறையும் ஏதோ சொல்லவந்து சொல்லாமலே போகிறது என்னவள் போல் கடல் அலையும் ...........

பொக்கிஷம்

Image
பொக்கிஷமாய்  நீ,தீர்ந்து விட்டது என கருதி தூக்கி எறிந்த பேனா அது என் வசம் வைத்திருக்கிறேன் அதை பொக்கிஷமாய் .. கையால் திறக்க முடியும் என திறந்தும் பல்லால் கடித்து திறந்த உன் ஜாமன்றி பாக்ஸ், வைத்திருக்கிறேன் அதை பொக்கிஷமாய் . பணம் எவ்வளவு இருக்கிறது என்பதைவிட நீ வாங்கி கொடுததில்தான் இருக்கிறது என் மனிபர்சின் மதிப்பு என்பதால் வைத்திருக்கிறேன் அதை பொக்கிஷமாய் . சாப்பிட்ட ஈரம் காய்ந்த உன் முகத்தை கைகுட்டையால் தான் துடைப்பேன் என நீ துடைத்த உன்கைக்குட்டை அது என் வசம் வைத்திருக்கிறேன் அதை பொக்கிஷமாய் .... வேப்ப மரத்தடியில் இருவரும் அமர்ந்து படிக்கும் பொழுது உன் தலையில் கொட்டி கிடந்த வேப்பம்பூக்களை விடவா அந்த நட்சத்திரம் அழகு ,பொரிக்கி எடுத்து வைத்திருக்கிறேன் அதை நான் பொக்கிஷமாய் .... புத்தகத்திற்கு இடையில் நீ வைத்திருந்த மயில் இறகில் நான் கேட்டதற்காக பிய்த்து கொடுத்த ஓரிரு மயில் இறகினை வைத்திருக்கிறேன் நான் பொக்கிஷமாய் .... சண்முகம் ,பிஎ .தமிழ்

அழகில்லை

Image
அழகில்லை நிலவொன்றும் அப்படி அழகில்லை என்னவளிடம் ஒப்பிடும் போது........

வீரத்தில் சிறந்தவர்கள்

கடுகு சிறுத்தாலும் காரம் போகாது சிறு உளி கொண்டு தான் சிலை வடிகிரார்களே தவிர யாரும் பெரிய கடப்பாரை கொண்டு சிலை வடிப்பதில்லை .. பெரிய பெரிய திமிங்கலங்கள் எத்தனை வந்தாலும் கப்பல் முன்னோக்கி போய் கொண்டுதான் இருக்கும் ஆனால் சிறு மீன்களான சினாங்குனி கூட்டம் வந்து விட்டால் அந்த கப்பலையே சாய்த்து விடும் .. நங்கள் வயதில் சிறியவர்களாக இருந்தாலும் வீரத்தில் சிறந்தவர்கள் ............... பா .சண்முகம் ...

என் படைப்பு

இது வரை என் படைப்புக்களை ஒரு நாளிதழ் களுக்கு கூட அனுப்பியதில்லை என் எழுத்துக்கள் எந்த ஒரு ரயில் நிலையத்திலும் கடற்கரை களிலும் சுண்டல் ,வேர்கடலை மடிக்கும் காகித மாவதில் எனக்கு விருப்பம் இல்லை சண்முகம் ...

காதல் கொண்டு அழிக்கிறாய் .

எமன் எந்த ரூபத்தில் வந்தாலும் நான் எதிர்ப்பேன் என தெரிந்துதான் என்னவள் ரூபத்தில் வந்தான் .அவன் எந்த ஆயுதம் எடுத்து வந்தாலும் நான் அழிப்பேன் என தெரிந்து தான் காதல் எனும் ஆயுதத்தை தாங்கி வந்தான் நான் ஜெயித்து இருப்பேன் தோற்பது நீயாக இருப்பதால் நான் தோல்வியை தழுவினேன் .. ஜெயித்த எமனிடம் தோற்றவனின் ஒரு கேள்வி எங்களை அழிக்க தான் உலகில் எவ்வளவோ வழிகள் இருக்கையில் கன்னியரை பயன்படுத்தி ஏன்..காதல் கொண்டு அழிக்கிறாய்.... சண்முகம் ...