
இது எப்படிடி நடந்ததுன்னு கேட்டா நீ நீயா இருப்பதாலும் நான் நானாக இருப்பதாலும் ன்னு குணா படத்துல வர வசனம் பேசுவா''என் யாழினி .., அதுதான் எனக்கு அவ கிட்ட ரொம்ப பிடித்தது ,நடு நடுவே இப்படி பேசினா என்ன அர்த்தம் ன்னு சொல்லுவா அவளோட அந்த ஒவ்வொரு அர்த்தத்திலும் நான் அர்த்த மற்றவன் ஆகிருகிறேன் பிறந்தநாள் அன்று உன்னை பார்த்தேன் பரிசளிக்க கையில் பரிசினை ஒளித்து வைத்திருந்தேன் ,உன் பக்கத்தில் பறந்த ஆரஞ்சு வண்ண பட்டாம்பூச்சி உன் மேல் மெதுவாய் மோதி வண்ணங்கலற்று வெறுமையாய் பறந்தது .அதை விட சிறந்தது அல்ல என் பரிசு, எனக்கு முன் முந்தி கொண்டது பட்டாம் பூச்சி ... உனக்காக பூங்காவில் காத்திருந்தேன் என் அருகில் இருந்த மரக்கிளையில் பறவை ஒன்று தனியே அமர்ந்திருந்தது ,நீ வர தாமதமானதால் நான் கிளம்ப தயாரானேன் அந்த பறவையும் பறந்து விட்டது பாவம் அதுவும் தன் ஜோடிக்காக காத்திருந்ததோ என்னவோ ?' இருவரும் குளக்கரையில் அமர்ந்திருந்தோம் சிறு சிறு கற்களை குளத்தில் போட்டபடி நீ இருந்தாய் எத்தனை முறை உடைந்தது குளம் . பூங்காவின் புல் த...