Posts

Showing posts from September 18, 2011

வியாபாரம்

முதல் வியாபாரம் செய்ய போகும் நாமும் கடைகாரனோடு சேர்ந்து வேண்ட வேண்டியதாய் இருக்கிறது விற்பனை நன்றாய் ஆகவேண்டுமென !

நிர்வாணம்

அடுத்தவர்களை மறந்து, தன்னை மட்டும் அறிந்த பைத்தியக்காரன் எனப்படும் ஒருவன், நெடுக செல்லும் சாலை ஒன்றில் செல்கிறான் , வீசும் காற்றில் அவன் ஆடை விலக , நிர்வாணத்தை  மறந்து  தன் கைலியை மட்டும்  பத்திரபடுத்துகிறான் அவ்வழியே அவனை சிரிப்புடன் கடந்து போகின்றன ஆடையணிந்த அவிழ்க்கப்படாத சில நிர்வாணங்கள் பா.சண்முகம்

பால்யத்தின் பக்கங்கள் !

  வெற்றிடம் ஒன்றின் இருட்டு மூலையில் மெல்லிய நூல் ஒன்றின் முனையில் கட்டப்பட்டு சதுரமாய் வரைந்து தொங்கிகொண்டிருகிறது வானம். நெடு உயரத்தில் பருந்தொன்று தன் அலகில் இரையை கொத்தியபடி பறந்து செல்கிறது. மற்றொரு ஓவியத்தில் குதிரை ஒன்று வேகமாய் ஓட புழுதியை கிளப்பியபடி விரிகிறது சாலை. பக்கத்தில் அமர்ந்து கிறுக்கி கொண்டிருக்கிறாள்  இரண்டு வயதையொத்த பெண் குழந்தை. அப்படி ஒன்றும் இல்லை என் ஓவியம் அவளுடையதைபோல் ! அவளை பால்யமென நினைத்து கொண்டிருக்கிறேன்.  அந்தவெற்றிட இருட்டில் என்னை அவள் பால்யமென சுமந்து திரிந்து  கொண்டிருக்கிறாள் கையில் தூரிகையோடு !!!                              பா .சண்முகம்