இது எப்படிடி நடந்ததுன்னு கேட்டா நீ நீயா இருப்பதாலும் நான்

நானாக இருப்பதாலும் ன்னு குணா படத்துல வர வசனம்

பேசுவா''என் யாழினி  .., அதுதான் எனக்கு அவ கிட்ட ரொம்ப பிடித்தது

,நடு நடுவே இப்படி பேசினா என்ன அர்த்தம் ன்னு சொல்லுவா

அவளோட அந்த ஒவ்வொரு அர்த்தத்திலும் நான் அர்த்த

மற்றவன் ஆகிருகிறேன்

பிறந்தநாள் அன்று உன்னை பார்த்தேன் பரிசளிக்க கையில்

பரிசினை ஒளித்து வைத்திருந்தேன் ,உன் பக்கத்தில் பறந்த

ஆரஞ்சு வண்ண பட்டாம்பூச்சி உன் மேல் மெதுவாய் மோதி

வண்ணங்கலற்று வெறுமையாய் பறந்தது .அதை விட சிறந்தது

அல்ல என் பரிசு, எனக்கு முன் முந்தி கொண்டது பட்டாம் பூச்சி ...


உனக்காக பூங்காவில் காத்திருந்தேன் என் அருகில் இருந்த

மரக்கிளையில்  பறவை ஒன்று தனியே அமர்ந்திருந்தது ,நீ வர

தாமதமானதால் நான் கிளம்ப தயாரானேன் அந்த பறவையும்

பறந்து விட்டது பாவம் அதுவும் தன் ஜோடிக்காக

காத்திருந்ததோ என்னவோ ?'

இருவரும் குளக்கரையில் அமர்ந்திருந்தோம் சிறு சிறு கற்களை

குளத்தில் போட்டபடி நீ  இருந்தாய் எத்தனை முறை உடைந்தது

குளம் .

பூங்காவின் புல் தரையில் இருவரும் வானத்தை பார்த்தபடி

படுத்திருந்தோம் மேகத்தில் தெரியும் சிறு சிறு வாழ்க்கை

விசித்திரங்களின் உருவங்களை பற்றி  குட்டி குட்டி கதை

சொல்லி கொண்டிருந்தாய் நீ என்னிடம் ,

எனக்கு தெரிந்த நாம் சந்தித்த உருவங்கள் பற்றி உன்னிடம் நான்

சொல்லவே இல்லை உனக்கும் தோன்றி இருக்கலாம் நீ

சொல்லாமலும் இருந்திருக்கலாம் . 

எனக்கு வர மனைவிய எப்படி வச்சிருப்பேன் தெரியுமான்னு நான்

சொன்னேன் ?எப்படி ?வச்சிருப்ப ப்ளீஸ் ன்னு உதட்டை மடித்து


சுருக்கினாய்'' கொஞ்சம் கூட அழவைக்க மாட்டேன் ,நீ பயன் 

படுத்திய எல்லா பொருட்களிடமும் உன்னோட சேட்டைகளை

கேட்ப்பேன் 'உன் வீட்டுக்கு வந்து உன் பள்ளி புத்தகத்தை

கேட்ப்பேன் ,பள்ளிக்கு கொண்டு போன புத்தக பை யிடம் உன்

சிணுங்களை  கேட்ப்பேன் ,கோல பொடியிடம் உன் ஸ்பரிசத்தை

கேட்ப்பேன் ,
அழகாய் தலை அசைத்தாய் சிறு கோழிகுஞ்சு போல் .

நமக்கு ரொம்ப பிடித்த விஷயத்தை செய்ய போகும் முன்

நம்மால் எப்பவும் போல் இருக்க முடிவதில்லை ,அன்று நீ என்

வீட்டில் இருக்கிறாய்  என தெரிந்த உடன் உன்னை பார்க்க 

என்னால் போக முடியவில்லை' எப்பவுமே போகிற அதே தெரு

தான்,. கால்கள் எல்லாம் ஒரே இடத்தில் நிற்பது போல் பிரம்மை 

எனக்கு ,இன்றும் அப்படித்தான் இருக்கிறது உன் விரல் பிடித்து

நடக்கும் பொழுது என் கால்களை பூமிக்கு அடியில் இருந்து

நிறைய கைகள் பிடித்து கொள்வது போல் அதே பிரம்மை ...யுகம்

ஒன்றின் துகளாய் நகர்கிறது கால்கள் ..... 

ஒரு விஷயம் சொல்லி கொடுத்த நீ எனக்கு,.உனக்கு

நினைவிருக்கா ?' யாராவது  பதிலோடு கேள்வி கேட்கும் பொழுது

அவங்க கேள்வி கேட்டு முடிச்ச உடன் அவர்கள் கொடுக்கும்

நான்கு பதிலில் முதல் பதில்தான் சரியான பதிலாக இருக்கும்

என்று ''நான் கேட்ட நிறைய கேள்விகளுக்கு நீ கூறிய முதல்

பதிலே சரியாக இருந்திருக்கிறது..உன்கிட்ட நான் கேட்குற

கேள்வி ஒண்ணே ஒண்ணுதான்,


நீ எப்படிடி இந்த பூமியில வந்து பிறந்த ,,!!
  பா.சண்முகம்

Comments

பூங்காவின் புல் தரையில் இருவரும் வானத்தை பார்த்தபடி

படுத்திருந்தோம் மேகத்தில் தெரியும் சிறு சிறு வாழ்க்கை

விசித்திரங்களின் உருவங்களை பற்றி குட்டி குட்டி கதை

சொல்லி கொண்டிருந்தாய் நீ என்னிடம்

supper un pathivu innum valara en manamarntha valthukkal
naan enna solluven.. ennamo aayiruchu unakku...

Popular posts from this blog

வியாபாரம்

வாழ்வியலுக்கான சாத்தியங்கள்