நினைவுகள்







அந்த நினைவுகளை
எப்படி மறப்பது அந்த நினைவுகளை
கடற்கரை மணலில் என்கால்கள்
புதைத்து நீ விளையாடிய பொழுதுகள்,
கொட்டும் மழையில் ஒற்றை குடையில்
இருவரும் சேர்ந்து பள்ளி சென்றதை
இடைவேளை மணிகள் நமக்காக
ஒலிப்பதால் என்னவோ அதிகம்
பழுதாகி இருக்கும் வாசலில்
சாயம் மிட்டாய் விற்கும் ராமசாமி
அண்ணன்கூட நினைவு வைத்து
இருப்பார் கையில் எனக்கு கடிகாரமும்
உனக்கு பாம்பு போல் உருவமும்
செய்து கொசுறாக கொஞ்சம் கன்னத்திலும்
பூசிவிட்ட சாய மிட்டாய் இன்னமும் இனிக்கிறது
என் உள் நாக்கில் ,நீ ராட்டினம் சுற்றும் போது
கூட உனக்கு தெரியாமல் அவரிடம் நான்
தரும் அதிக காசுதான் உன்னை அதிக நேரம்
சுழல செய்கிறது என்று அறியாமல் நீ சுற்றிய
அந்த இடம் இன்னும் மாறாமல் என்னுள்
சுற்றி கொண்டுதான் இருக்கிறது ராட்டினமாய் .
எனக்கு நேரம் பார்க்க கற்று கொடுத்ததும் நீ தான்
அதனாலோ என்னவோ ஒவ்வொரு முறையும்
நேரம் பார்க்கும் போது நினைவுக்கு வருகிறது
நம் பள்ளி மணியும் உன் முகமும் ............நினைவுகளோடு -சண்முகம்
.

Comments

Popular posts from this blog

வியாபாரம்

வாழ்வியலுக்கான சாத்தியங்கள்