பொக்கிஷம்

பொக்கிஷமாய் 

நீ,தீர்ந்து விட்டது என கருதி தூக்கி எறிந்த பேனா அது என் வசம்
வைத்திருக்கிறேன் அதை பொக்கிஷமாய் ..
கையால் திறக்க முடியும் என திறந்தும் பல்லால் கடித்து
திறந்த உன் ஜாமன்றி பாக்ஸ்,
வைத்திருக்கிறேன் அதை பொக்கிஷமாய் .
பணம் எவ்வளவு இருக்கிறது என்பதைவிட நீ
வாங்கி கொடுததில்தான் இருக்கிறது என் மனிபர்சின் மதிப்பு என்பதால்
வைத்திருக்கிறேன் அதை பொக்கிஷமாய் .
சாப்பிட்ட ஈரம் காய்ந்த உன் முகத்தை கைகுட்டையால் தான்
துடைப்பேன் என நீ துடைத்த உன்கைக்குட்டை அது என் வசம்
வைத்திருக்கிறேன் அதை பொக்கிஷமாய் ....
வேப்ப மரத்தடியில் இருவரும் அமர்ந்து படிக்கும் பொழுது
உன் தலையில் கொட்டி கிடந்த வேப்பம்பூக்களை விடவா
அந்த நட்சத்திரம் அழகு ,பொரிக்கி எடுத்து வைத்திருக்கிறேன்
அதை நான் பொக்கிஷமாய் ....
புத்தகத்திற்கு இடையில் நீ வைத்திருந்த மயில் இறகில்
நான் கேட்டதற்காக பிய்த்து கொடுத்த ஓரிரு மயில்
இறகினை வைத்திருக்கிறேன் நான் பொக்கிஷமாய் ....



சண்முகம் ,பிஎ .தமிழ்

Comments

Popular posts from this blog

வியாபாரம்

வாழ்வியலுக்கான சாத்தியங்கள்