நான் சண்முகம் ஆனது




மூன்றாம் வகுப்பிலிருந்து நான்காம் வகுப்பிற்கு ஆசிரியர் ஒவ்வொருவரையும் பெயர் வாசித்து
உட்கார வைத்துகொண்டிருந்தார் என் இடமும் வந்தது ,மூன்றாம் வகுப்பு வரை தான் பலகை வைத்து எழுத வேண்டும் பல்பத்தை மறந்து பேனாவை கையில் எடுத்த தினம் அது ,வகுப்புல நான் தான் லீடர் ஆரம்ப பள்ளி என்பதால் பள்ளி மாணவ தலைவனும் நான் தான், குடியரசு தினம் ,சுதந்திர தினம் போன்ற நாட்களில் நான்  தான் தேசியகீதம் பாட வேண்டும் ,

அம்மாசி டீச்சர் அவங்க தான் நான்காம் வகுப்பு ஆசிரியர் ஒல்லியா கருப்பா இருப்பாங்க !!நல்லா முழுசு முழுசா எழுதுவாங்க Sanmugam எழுதி கொண்டிருந்த என்னை பெயர் மாற்றி Shanmugam என சரியாக சொல்லி கொடுத்தார் ,,

காலைல சீக்கிரமா வந்த உடன் பசங்களோடு சேர்ந்து கொஞ்ச நேரம் கிரிக்கெட் விளையாடுவோம் , பிளாஸ்டிக் பந்து தான் அப்பெல்லாம்,என்  வகுப்பு பக்கத்திலே சின்னதா கிரௌண்ட் இருக்கும் அங்க தான் விளையாடனும் ,அங்க விளையாடுரதுலையே நான் தான் பந்தை ரொம்ப தூரம் தூக்கி அடிப்பேன் ,இப்ப வரைக்கும் அதுதான் ,

ஒரு முறை நடந்த பள்ளி ஆண்டு விழா விளையாட்டு போட்டில கலந்து கொள்ள  போகும் போது அம்மாசி டீச்சர் நீ குள்ளமா இருக்குற உன்னால ஓட முடியாதுன்னு சொன்னாங்க !!எனக்கு தெரியும் என்னால ஜெயிக்க முடியும்னு!! ,டீச்சருக்கு தெரியாம பேர் கொடுத்துட்டு வகுப்புக்குள்ளயே ஒரு முனை ல இருந்து இன்னொரு முனைக்கு ஓடனும் ,அதுல எனக்கு இரண்டாம் பரிசு ,பள்ளியில் நான் வாங்கும் முதல் பரிசு தட்டு ஒன்று கொடுத்தார்கள் ,அம்மாசி டீச்சருக்கு ஆச்சர்யம் !!!

லீடர் என்பதால் எல்லா பசங்களுக்கும் காலைல வந்த உடன் இங்கிலீஷ் ல போயம் சொல்லி தரனும் ,நாங்கதான் சூப்பரா சொல்லி தருவோம் ல ,எல்லாரையும் சரியா டீச்சர் கிட்ட ஒப்பிக்க வைக்கணும் ,
பெலுசியா என்  வகுப்பு பொண்ணு ,நாங்க பெப்சி ன்னு கூப்பிடுவோம்,பள்ளிக்கு பக்கத்து வீடு அவளுக்கு ,
அவ வீட்ல இருந்து நெல்லிக்காய் கொண்டு தருவா பசங்களுக்கு ,ஐம்பது பைசா ,இருபத்தைந்து பைசா வென
எனக்கு மட்டும் ப்ரீ ,,
ஒரு முறை அவள்  பள்ளிக்கு வரலை ஜன்னலுக்கு வெளிய பார்த்தேன் ராட்டினம் சுற்றி கொண்டிருந்தாள் பெலுசியா ,நானும் நீண்ட நேரம் அவளையே பார்த்து கொண்டிருந்தேன் ,சிறிது நேரம் கழித்து வகுப்பே
அமைதியாக,, திரும்பிய நான் ஆசிரியர் வந்து ரொம்ப நேரம் ஆகிருந்தது நான் ஒன்றும் பேசாமல்
அப்படியே அமர்ந்து விட்டேன் ,
போன சனிக்கிழமை பெலுசியாவை பார்த்தேன்  இடுப்புல ஒரு குழைந்தையும் ,நடக்க வைத்து ஒரு குழைந்தையும் அழைச்சிக்கிட்டு போய் கிட்டு இருந்தா !! அந்த நெல்லிக்கனி சுவை நாக்கில் வந்து விட்டு சென்றது ,

பசங்க கிட்ட இருந்து பம்பரம் ,கோலி இதுங்களை பிடிங்கி கொண்டு போய் டீச்சரிடம் கொடுக்க வேண்டும் ,ஒரு நாள் அப்படி பறித்த பம்பரங்களை ஜெயலக்ஷ்மி டீச்சர் என்னிடம் கொடுத்து குளத்தில் போட்டு வர சொன்னார் ,கூடவே குட்டி பொண்ணையும் அனுப்பினாங்க பாக்கிய லக்ஷ்மி தான் அவள்  பெயர்  நாங்க குட்டி !குட்டின்னு கூப்பிடுவோம்,உணவு இடைவெளி விடும்நேரம் மூன்று பம்பரங்களை கொண்டு போனோம் முதலில் நான் எறிய வேண்டும்
மனமே இல்லை அதை தூக்கி எறிய ,எடுக்கும் தூரத்திலே அது விழுந்தது ,டேய் சண்முகம் !!வேணும்னு தானே டா இங்கயே போட்ட!!
யே இல்லை குட்டி!! ன்னு சொல்லி இன்னொனை அதிக தூரம் எறிந்தேன் ,அவளும் நடுகுளத்தில் பம்பரத்தை எறிந்தாள் ,

வகுப்பிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தோம் ,அம்மாசி டீச்சர் வழியில்
டேய் !சண்முகம் எங்கடா ரெண்டு பேரும் போயிட்டு வரிங்க ?
குட்டி பொண்ணு அனைத்தையும் விளக்க !!
டேய் பம்பரத்தை தூக்கி எறிஞ்சியா இல்லை எங்கயாவது மறைச்சி வச்சி இருக்கியா ?டீச்சர் அதெல்லாம் இல்லை வேணும்னா பாக்கிய லக்ஷ்மிய கேளுங்க ?

வகுப்பு உள்ளே நுழைந்தாச்சு ஜெயலக்ஷ்மி டீச்சர் சண்முகம் !!பம்பரத்தை எறிஞ்சியா இல்லை ?எங்கயாவது ??டீச்சர் அம்மாசி டீச்சரும் இதைத்தான் கேட்டாங்க !நீங்களும் இதையே கேட்குறீங்களே
வகுப்புல பசங்க எல்லாம் சிரிச்சாங்க,,

அழகான ஞாபகங்களை ஞாபகப்படுத்தி பார்ப்பதை விட வேறு எந்த ஞாபகம் இருந்து விட போகிறது நமக்கு

எழுதுகோல் மை இன்னும் தீரவில்லை இன்னும்  தொடரும் ..
                               அத்தியாயம் -இரண்டு

காலையில் பள்ளிக்கு வரும் போது அம்மா தரும் காசு இருபத்தி ஐந்து பைசா, இல்லையென்றால் இருபது  பைசா தான், ஐந்தாம் வகுப்பு வரை ,பள்ளிக்கு வர வழில தாத்தா கடைன்னு ஒண்ணு இருக்கும், அங்க கமர கட்டு ,காசு மிட்டாய் ,வாங்குவேன் ,காசு மிட்டாய் ல காசு இருக்கும் ,ஐம்பது பைசா ,இருபத்தி ஐந்து பைசா பில்லைகள்,எனக்கு அதிஷ்டம் கம்மி என்பதால் கஷ்டம் தான் அதெல்லாம் ,பள்ளிக்கு வெளிய சாய மிட்டாய் விற்பனை  நடக்கும் ஒரு பெரிய மூங்கில் பலகையில் ஜவ்வு மிட்டாய் வைத்து கொண்டு விற்று கொண்டி இருப்பார் ஒரு பெரியவர்,அந்த பலகையின் மேல் ஒரு பொம்மை ஒன்று இருக்கும், ,கையில் ,பாம்புபோலவும் ,கடிகாரம் போலவும் உருவம் செய்து ,
கொஞ்சம் கன்னத்திலும் கொசுராக பூசி விடுவார் ,

என் பள்ளிக்கு பக்கத்துல வரும் சாலையில் தினமும் காலையில் ஒரு பெரியவர் தன் சட்டை பாக்கெட்டில் சின்னச்சின்னதாய் கற்கண்டு வைத்திருப்பார், அவ்வழியே வரும் போதும் கண்ணில் படும் சிறுவர்களுக்கு  ஒரு கை அள்ளி கொடுப்பார் ,நிறைய முறை நான் வாங்க போய் வாங்காமலே வெறுமையாய் வந்திருக்கிறேன் ,
ஒரு நாள் அப்படி  வெறுமையாய் திரும்பிய தினம் மாலை வீட்டுக்கு சென்று கொண்டிருக்கும் போது எப்பவும் போகும் வழியை விடுத்து வேறு வழியில் சென்றேன் ,செருப்பு இல்லாத கால் என்பதால் சாலையில் இருந்த கல்லில் கால் கட்டை விரல் இடித்து நகம் பெயர்த்து கொண்டது
வலியோடு வந்து கொண்டிருந்த என்னை அந்த பெரியவர் பார்த்து கை நிறைய கற்கண்டு கொடுத்து அனுப்பினார் ,இனிப்பு வந்ததால் வலி குறைந்தது எனக்கு ,இப்படி சின்ன சின்ன மகிழ்ச்சி சின்ன சின்ன துயரத்தை கட்டு படுத்துதுல அதனால் தான் மனிதம் இன்னும் அப்படியே இருக்கிறது!!

தேர்வு தாள்களை நானும் என் நண்பர்களும் திருத்துவோம், எங்கள் தாள்களை மட்டும் ஆசிரியர் திருத்துவார் ,ஒவ்வொரு ஆண்டு படிப்பு முடியும் போதும் புத்தகங்களை பள்ளியில் கொடுத்து விட வேண்டும் அப்போது அது பாரமாய் தெரிந்ததால் கொடுத்து விட்டோம், கொஞ்ச நாள் முன்னாடி அதை பற்றி விசாரிக்கலாம் என சென்ற போது எனக்கு தெரிந்த ஒரு ஆசிரியர் கூட இல்லை ,அதை எல்லாம் காகிதத்திற்கு போட்டு விட்டார்களாம்

,நான் படித்து புரட்டிய புத்தகம், நம்மை புரட்டி போட்டு சென்று விட்டது!!,

 ஐந்தாவது   வரைதான் அந்த ஆரம்ப பள்ளி, அதற்க்கு மேல் வேறு அரசு உயர் நிலை பள்ளி, பேருந்தில் செல்லும் தூரம், ஆசிரியர் பாடம் நடத்தும் போது நான் தான்  போர்ட் இல் எழுதி போடுவேன்
என் சாக்பீஸ் இன்னும் கரையவில்லை இன்னும் அந்த வெள்ளை நிறம் கையில் ஒட்டி கொண்டுதான் உள்ளது !!


                                  அத்தியாயம்- மூன்று

ஐந்தாம் வகுப்பு முடித்து ஆறாம் வகுப்பு அரசினர் மேல்நிலை பள்ளி ,ஆறாம் வகுப்பு சேர்ந்தவுடன் மிக பெரியதாய் இருந்தது , நான் இத்தனை நாட்களாய் படித்த முழு பள்ளியே அந்த பள்ளியில் ஒரு வகுப்பில் அடங்கி போனது ,இவ்ளோ பெரிய பள்ளியில் என்னை தனியாய் காண்பிப்பது மிக கடினம் என புரிந்தது.

ஒவ்வொரு பிரியட் என பிரித்து வைத்திருந்தார்கள் ,ஒன்றுமே புரியவில்லை முதல் நாள் ,ஆசிரியர் பெயர் இன்னென்ன என வகுக்கவே சில நாட்கள் பிடித்தது எனக்கு, வகுப்பாசிரியர் ஸ்டெல்லா மேரி அவர் ஆங்கிலம் ,மற்றும் அறிவியல் பாடம் நடுத்துவார் ,அப்பொழுதெல்லாம் உயரமாய் இருபவர்கள் தான் வகுப்பு லீடர் ,ஏற்கனவே அங்கு பெயில் ஆனவர்கள் தான் லீடர் ,சரவணன் ,செந்தில் என இருவர் கையில் மர ஸ்கேல் வைத்து கொண்டு அடிப்பார்கள்,முதலில் அதிக கஷ்ட பட்டேன் பிறகு நண்பகளாகி விட்டனர் ,தமிழ் ,ஆங்கிலம் ,அறிவியல் ,சமூகஅறிவியல் ,எல்லாவற்றிலும் அறுபது மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து விடுவேன் இதற்கு நடுவில் இருக்கும் கணிதம் மட்டும் அவ்வளவு சுலபத்தில் வரவில்லை எனக்கு!!அந்த கணக்கு மட்டும் இன்னமும் புரியவில்லை எனக்கு!!!
அறிவியலில் ஒரு நாள் முதல் இடை தேர்வு எழுதும் போது கேள்வித்தாளில் உள்ள அல்லது எனும் பகுதியையும் சேர்த்து எழுதிவிட்டேன் ,ஆர்வ கோளாரில் ,பேப்பரை பார்த்த ஆசிரியர் இப்படி யெல்லாம் எழுத கூடாது சண்முகம்!! என சொல்லி பத்து மதிப்பெண்ணை வேண்டும் என்றே குறைத்து விட்டார் .
வகுப்பில் நான் தான் முதல் மதிப்பெண் அறிவியலில் ,90 மதிப்பெண்.

ஸ்டெல்லா மேரி ஆசிரியர் கேள்வி கேட்கும் போது கேள்வி கேட்ட உடன் பதிலை சண்முகம் சொல்லு!! என சொல்லுவார் எழுந்து எழுந்து சொல்லவே நேரம் சரியாய் இருக்கும் எனக்கு,மகிழ்ச்சியும் கூட,
நாம் பள்ளி படித்த நாட்களில் அந்த நினைவுகள் நம் அருகிலே தான் இருக்கின்றது,அருகில் இருக்கும் போது அதன் மதிப்பு பெரியதாய் தோன்றவில்லை நமக்கு!!, நாம் ஒவ்வொன்றாய் கடக்கும் போது அவை ஏதோ நினைவுகளை நினைவுபடுத்தி விட்டு சென்றுவிடுகின்றன!! ,

நிறைய விஷயங்கள் எதேச்சை யாகி விடுகின்றன வாழ்கையில் ,
கடற்கரைகளிலோ,ரயில் நிலையங்களிலோ நாம் வாங்கும் சுண்டல் ,வேர்கடலை மடித்து தரும் காகிதத்தில் எப்படியும் சில நொடிகள் அதில் உள்ளதை படித்து விட்டுதான் கசக்கி எறிவோம் ,அது போல கசங்கி விடுகிறது நம் நினைவுகளும் .

அம்மாசி ,ஜெயலக்ஷ்மி ,ஸ்டெல்லா மேரி ,ஆவுடையப்பன் ,சுரேகா ,சுந்தரமூர்த்தி ,உமா மகேஸ்வரி ,ஜாஸ்மின் ,இவைகளெல்லாம் வெறும் பெயர்கள் அல்ல !!!வாழ்கையை விளக்கியவர்கள்''வாழ்க்கை'' அப்படி எனும் ஒன்றை, நமக்கு பாடம் நடத்தி விட்டு ,காணாமல் போய்விடுகிறார்கள்,,


பொதுவாக நம் வாழ்கையில் மகிழ்ச்சியாய் இருக்கவேண்டிய தருணங்கள் நாம் கவனிப்பதற்குள் கடந்து போய் விடுகிறது ...!!!!

Comments

அச்சு said…
நல்லா எழுதியிருக்க சண்முகம்.
கொண்டே புடுவேன் இப்டிலாம் எழுதி எல்லாரையும் ஃபீலாக்குறதுக்கு!! அழுவாச்சியா வருதுல......... தொடர்ந்து எழுதி அழுவ வை........
semmalai akash said…
இனி எனக்கு பிடித்தவர்கள் பட்டியலில் எவரும்

இருக்கபோவதில்லை உன்னை தவிர ,,..
அருமையான வரிகள் சண்முகம் ,
தொடருங்கள் நீங்கள் சொல்ல வருவதை.

Popular posts from this blog

வியாபாரம்

வாழ்வியலுக்கான சாத்தியங்கள்