♫ சாதாரண இடத்தில் சொன்னால் காற்றில் கலந்து விடும் ,உன் அறையில் சொல்கிறேனே ,உன் முற்றத்து சுவருக்கும் ,உன் கரடி பொம்மைக்கும் மட்டுமே தெரியட்டுமே நம் காதல் .....
சுதந்திரம் நமக்கு கிடைத்து விட்டதாம் யாருக்கு அவை ஈழம் இங்கு ஆழமாய் புதைந்ததில் தானும் சேர்ந்து மண்ணோடு புதைந்திற்று சுதந்திரத்திற்கு தானே போராடினோம் உங்கள் வீட்டில் ஒருவர் வந்திருந்தால் எங்கள் வீட்டில் ஒருவராவது பிழைத்திருக்க கூடும் வங்ககடலில் குருதியோடு சேர்ந்து எங்கள் கண்ணீரால் கடல் மட்டம் கூடிவிட்டிருக்க கூடும் உலகம் இப்படியே சுழலட்டும் நாளை நாணயங்களில் உள்ள புகை படங்கள் கூட சுதந்திரத்தை குறை சாற்றும் என்னை போல .. பா ;சண்முகம்
மூன்றாம் வகுப்பிலிருந்து நான்காம் வகுப்பிற்கு ஆசிரியர் ஒவ்வொருவரையும் பெயர் வாசித்து உட்கார வைத்துகொண்டிருந்தார் என் இடமும் வந்தது ,மூன்றாம் வகுப்பு வரை தான் பலகை வைத்து எழுத வேண்டும் பல்பத்தை மறந்து பேனாவை கையில் எடுத்த தினம் அது ,வகுப்புல நான் தான் லீடர் ஆரம்ப பள்ளி என்பதால் பள்ளி மாணவ தலைவனும் நான் தான், குடியரசு தினம் ,சுதந்திர தினம் போன்ற நாட்களில் நான் தான் தேசியகீதம் பாட வேண்டும் , அம்மாசி டீச்சர் அவங்க தான் நான்காம் வகுப்பு ஆசிரியர் ஒல்லியா கருப்பா இருப்பாங்க !!நல்லா முழுசு முழுசா எழுதுவாங்க Sanmugam எழுதி கொண்டிருந்த என்னை பெயர் மாற்றி Shanmugam என சரியாக சொல்லி கொடுத்தார் ,, காலைல சீக்கிரமா வந்த உடன் பசங்களோடு சேர்ந்து கொஞ்ச நேரம் கிரிக்கெட் விளையாடுவோம் , பிளாஸ்டிக் பந்து தான் அப்பெல்லாம்,என் வகுப்பு பக்கத்திலே சின்னதா கிரௌண்ட் இருக்கும் அங்க தான் விளையாடனும் ,அங்க விளையாடுரதுலையே நான் தான் பந்தை ரொம்ப தூரம் தூக்கி அடிப்பேன் ,இப்ப வரைக்கும் அதுதான் , ஒரு முறை நடந்த பள்ளி ஆண்டு விழா விளையாட்டு போட்டில கலந்து கொள்ள போகும் போது அம்மாச...
வண்ணங்கலற்று வெறுமையாய் கழிந்த என் நாட்கள் நீ வந்ததிலுருந்து வானவில்லாய் நகர்கிறது மாடியில் உறங்கும் பொழுது உன் முற்றத்து நட்சத்திரங்களை எண்ணி கொண்டிருந்தாய் விடிந்த பின் நீ விரல் நீட்டிய நட்சத்திரங்கள் விழுந்து கிடக்கின்றன உன் வாசலில் .... சூரியனிடம் அனுமதி வாங்கி சீக்கிரமே வருகிறது நிலவு ,, தான் கூடுகளுக்குள் உள்ள பறவைகள் சத்தமின்றி கிடக்கின்றன உன் முற்றத்து நட்சத்திரங்கள் கண் சிமிட்டி சிணுங்கி கொண்டே இருக்கிறது உருகி கொண்டிருக்கிறது நிலவு ஊரில் இருந்து நீ வீட்டிற்க்கு வரும் உன் வருகையை அறிந்து ... ஒவ்வொரு முறை நீ குறுந்தகவல் தட்டச்சும் போதும் உன் விரல்களின் வலியை உணர்ந்தே படிக்கிறேன் இனி நீ சொல்ல வேண்டியதை மனதில் நினை அது போதும் எனக்கு காற்றில் அலையும் தகவலை படித்து கொள்கிறேன் நான் . விடியல் வந்தும் தூங்கும் உன்னை அருகில் அமர்ந்து ரசிக்கிறேன் எந்த சலனமும் இல்லாமல் என்னோடு சேர்ந்து ரசித்துக்கொண்டு இருக்கிறது உன்னை சூரியனும் ...
Comments