நிர்வாணம்


அடுத்தவர்களை மறந்து, தன்னை மட்டும் அறிந்த
பைத்தியக்காரன் எனப்படும் ஒருவன்,
நெடுக செல்லும் சாலை ஒன்றில் செல்கிறான் ,
வீசும் காற்றில் அவன் ஆடை விலக ,
நிர்வாணத்தை  மறந்து  தன் கைலியை
மட்டும்  பத்திரபடுத்துகிறான்
அவ்வழியே அவனை சிரிப்புடன்
கடந்து போகின்றன
ஆடையணிந்த அவிழ்க்கப்படாத சில
நிர்வாணங்கள்


பா.சண்முகம்

Comments

Popular posts from this blog

சுதந்திரம் கிடைத்து விட்டதாம் ...

நான் சண்முகம் ஆனது

காதலிக்கிறேன் என்று சொல் ...