சுதந்திரம் நமக்கு கிடைத்து விட்டதாம் யாருக்கு அவை ஈழம் இங்கு ஆழமாய் புதைந்ததில் தானும் சேர்ந்து மண்ணோடு புதைந்திற்று சுதந்திரத்திற்கு தானே போராடினோம் உங்கள் வீட்டில் ஒருவர் வந்திருந்தால் எங்கள் வீட்டில் ஒருவராவது பிழைத்திருக்க கூடும் வங்ககடலில் குருதியோடு சேர்ந்து எங்கள் கண்ணீரால் கடல் மட்டம் கூடிவிட்டிருக்க கூடும் உலகம் இப்படியே சுழலட்டும் நாளை நாணயங்களில் உள்ள புகை படங்கள் கூட சுதந்திரத்தை குறை சாற்றும் என்னை போல .. பா ;சண்முகம்
மூன்றாம் வகுப்பிலிருந்து நான்காம் வகுப்பிற்கு ஆசிரியர் ஒவ்வொருவரையும் பெயர் வாசித்து உட்கார வைத்துகொண்டிருந்தார் என் இடமும் வந்தது ,மூன்றாம் வகுப்பு வரை தான் பலகை வைத்து எழுத வேண்டும் பல்பத்தை மறந்து பேனாவை கையில் எடுத்த தினம் அது ,வகுப்புல நான் தான் லீடர் ஆரம்ப பள்ளி என்பதால் பள்ளி மாணவ தலைவனும் நான் தான், குடியரசு தினம் ,சுதந்திர தினம் போன்ற நாட்களில் நான் தான் தேசியகீதம் பாட வேண்டும் , அம்மாசி டீச்சர் அவங்க தான் நான்காம் வகுப்பு ஆசிரியர் ஒல்லியா கருப்பா இருப்பாங்க !!நல்லா முழுசு முழுசா எழுதுவாங்க Sanmugam எழுதி கொண்டிருந்த என்னை பெயர் மாற்றி Shanmugam என சரியாக சொல்லி கொடுத்தார் ,, காலைல சீக்கிரமா வந்த உடன் பசங்களோடு சேர்ந்து கொஞ்ச நேரம் கிரிக்கெட் விளையாடுவோம் , பிளாஸ்டிக் பந்து தான் அப்பெல்லாம்,என் வகுப்பு பக்கத்திலே சின்னதா கிரௌண்ட் இருக்கும் அங்க தான் விளையாடனும் ,அங்க விளையாடுரதுலையே நான் தான் பந்தை ரொம்ப தூரம் தூக்கி அடிப்பேன் ,இப்ப வரைக்கும் அதுதான் , ஒரு முறை நடந்த பள்ளி ஆண்டு விழா விளையாட்டு போட்டில கலந்து கொள்ள போகும் போது அம்மாச...
பக்கத்துக்கு தெருவில் இருக்கும் கோவிலுக்கு பாட்டியை அழைத்து செல்ல வேண்டுமாம் அப்பா சொன்னார் செய்யவில்லை உனக்காக இங்கே காத்திருக்கிறேன் .. தோட்டத்தில் பூத்து குலுங்கும் மல்லி கொடிக்கு பந்தலிட வேண்டுமாம் அம்மா சொன்னார் செய்யவில்லை உனக்காக இங்கே காத்திருக்கிறேன் .. நாளை தோழியின் திருமணதிற்கு நளினமாய் செல்ல புடவையை தேய்த்து தர சொன்னாள் அக்கா செய்யவில்லை உனக்காக இங்கே காத்திருக்கிறேன் .. ஏய் கவிதை பெண்ணே , நான் காத்திருப்பதுதான் உனக்கு சுகம் என்றால் சொல்லிவிடு இந்த ஜென்மம் மட்டுமல்ல இனி வரும் எத்தனை ஜென்மத்திலும் உனக்காக காத்திருக்கிறேன் நீ மட்டும் என்னை காதலிக்கிறேன் என்று சொன்னால் ...
Comments
முடிந்தால் என்ன வலைப்பதிவை பார்க்கவும்\
WWW.SOWMI-
KATTRADHUTAMIL.BLOGSPOT.COM.