சுதந்திரம் நமக்கு கிடைத்து விட்டதாம் யாருக்கு அவை ஈழம் இங்கு ஆழமாய் புதைந்ததில் தானும் சேர்ந்து மண்ணோடு புதைந்திற்று சுதந்திரத்திற்கு தானே போராடினோம் உங்கள் வீட்டில் ஒருவர் வந்திருந்தால் எங்கள் வீட்டில் ஒருவராவது பிழைத்திருக்க கூடும் வங்ககடலில் குருதியோடு சேர்ந்து எங்கள் கண்ணீரால் கடல் மட்டம் கூடிவிட்டிருக்க கூடும் உலகம் இப்படியே சுழலட்டும் நாளை நாணயங்களில் உள்ள புகை படங்கள் கூட சுதந்திரத்தை குறை சாற்றும் என்னை போல .. பா ;சண்முகம்
நீல நிற தந்தியில் தகவல் வந்திருந்தது ஊரில் அப்பா கவலைகிடமென! ஊதா நிற பேருந்தில் சிவப்பு நிற இருக்கையில் வெள்ளை பயண சீட்டுடன் போய்க்கொண்டிருந்தேன் நான், ஊர் போய் சேரும்பொழுது வானம் அடர் கறுப்பு நிறத்தில் தன்னை மாற்றிக் கொண்டிருந்தது, எல்லாம் முடிந்து போய் விட்டதாக மஞ்சள் நிற சட்டைப் போட்டிருந்த மாரிமுத்து அண்ணன் சொல்லி அனுப்பினார், மயானத்தை தேடி போய்க் கொண்டிருந்தேன் நான் அப்பாவினுடைய கல்லறையில் நிறம் இல்லா மழை பெய்துக்கொண்டிருந்தது! நிறைய வேளைகளில் மனித வாழ்வியலுக்கான சாத்தியங்கள் நிறங்களால் நிரம்பி விடுகின்றன . பா.சண்முகம்
சனிக்கிழமை இறந்த ஒருவன் தனியாய் போககூடாதென கோழி ஒன்றை பலிகொடுக்கிறார்கள் மரணத்திற்காக மரணத்தையே ! காத்துகொண்டிருக்கிறது தேவர் கடை கோழி ஒன்று, ஒவ்வொரு மரணங்களின் போதும் கூடவே நிறைய மரணங்களும் மரணித்து கொண்டுதான் இருக்கின்றன!! -பா .சண்முகம்
Comments
முடிந்தால் என்ன வலைப்பதிவை பார்க்கவும்\
WWW.SOWMI-
KATTRADHUTAMIL.BLOGSPOT.COM.