வாழ்வியலுக்கான சாத்தியங்கள்

நீல நிற தந்தியில் தகவல் வந்திருந்தது ஊரில் அப்பா கவலைகிடமென! ஊதா நிற பேருந்தில் சிவப்பு நிற இருக்கையில் வெள்ளை பயண சீட்டுடன் போய்க்கொண்டிருந்தேன் நான், ஊர் போய் சேரும்பொழுது வானம் அடர் கறுப்பு நிறத்தில் தன்னை மாற்றிக் கொண்டிருந்தது, எல்லாம் முடிந்து போய் விட்டதாக மஞ்சள் நிற சட்டைப் போட்டிருந்த மாரிமுத்து அண்ணன் சொல்லி அனுப்பினார், மயானத்தை தேடி போய்க் கொண்டிருந்தேன் நான் அப்பாவினுடைய கல்லறையில் நிறம் இல்லா மழை பெய்துக்கொண்டிருந்தது! நிறைய வேளைகளில் மனித வாழ்வியலுக்கான சாத்தியங்கள் நிறங்களால் நிரம்பி விடுகின்றன . பா.சண்முகம்